2026இல் மாநில அரசுகளின் கடன் சுமை அதிகரிக்கும்: ரிசர்வ் வங்கி

கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பிகார் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களின் கடன் சுமை, 2026ஆம் ஆண்டு 35 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
இந்த மாநில அரசுகளின் செலவினங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 2026இல் கேரளாவின் கடன் சுமை மாநில உள்நாட்டு உற்பத்தியில் 37.2 சதவிகிதம் ஆகவும், ராஜஸ்தானின் கடன் சுமை 39.8 சதவிகிதம் ஆகவும், மேற்கு வங்கத்தின் கடன் சுமை 34.2 சதவிகிதம் ஆகவும், பிகாரின் கடன் சுமை 38.7 சதவிகிதம் ஆகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மேற்கு வங்காளம், தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களின் வரி வருவாயில் 20 சதவிகிதத்துக்கு அதிகமாக வட்டி செலவுகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அதே சமயம் 2026ஆம் ஆண்டு தமிழகத்தின் கடன் சுமை மாநில உள்நாட்டு உற்பத்தியில் 27.7 சதவிகிதம் ஆக உயரும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்