மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

60 வருடங்களில் உலகின் மண் வளம் முற்றிலும் அழிந்துவிடும்!

60 வருடங்களில் உலகின் மண் வளம் முற்றிலும் அழிந்துவிடும்!

ஐ.நாவின் அமைதி தூதுவர் அதிர்ச்சி தகவல்

“அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுக்க நாம் இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், அடுத்த 60 வருடங்களில் உலகின் மண் வளம் முற்றிலும் அழிந்துவிடும் வாய்ப்புள்ளது” என ஐ.நாவின் அமைதிக்கான தூதுவர் ஜேன் குட் ஆல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

87% உயிரினங்கள் மண்ணைச் சார்ந்துள்ளது

சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர் பேசியுள்ள வீடியோவில், “ஒரு டீஸ்பூன் ஆரோக்கியமான மண்ணில் பூமியில் உள்ள மனிதர்களை விட அதிகமான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. கிரகத்தில் உள்ள சுமார் 87 சதவிகித உயிரினங்கள் மண்ணைச் சார்ந்துதான் உயிர் வாழ்கின்றன. ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால், நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய இந்த அற்புதமான சுற்றுச்சூழல் அமைப்பு பயங்கரமான ஆபத்தில் உள்ளது.

நாம் விவசாயத்தில் பயன்படுத்தும் ரசாயனங்கள் மூலம் உணவை விஷமாக்கி, நிலத்தடி நீர் வளத்தை அழித்து, மண் அரிப்பு மூலம் வளத்தை இழக்கிறோம். நிலத்தில் போதிய எண்ணிக்கையில் மரங்கள் இல்லாத இடங்களில் வெள்ளம் அல்லது பலத்த காற்று மூலம் வளமான மேல் மண் அடித்து செல்லப்படுகிறது. இந்த சீரழிவு தொடர்வதால் மிகவும் குறைவான உணவை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். ஆனால், மனித மக்கள்தொகை இன்னும் வளர்ந்து வருகிறது.

இப்படியே சென்றால் அடுத்த 60 வருடங்களில் மேல் மண் அனைத்தும் அழிந்துவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நாம் நமக்கு மட்டுமே தீங்கு விளைவிக்கவில்லை. பூமியில் உள்ள மற்ற எல்லா உயிர்களையும் அழித்துவிடுவோம் என்று அச்சுறுத்துகிறோம். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. மண்ணைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து மண் காப்போம் இயக்கத்தில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

பசியுடன் உறங்கும் 800 மில்லியன் மக்கள்

இதேபோல், உலக உணவு திட்டத்தின் (World Food Program) உதவி நிர்வாக இயக்குநர் மனோஜ் ஜூனேஜாவும் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (UN FAO) தகவலின்படி, 800 மில்லியன் மக்கள் தினமும் இரவு பசியுடன் உறங்க செல்கின்றனர். இது மிகவும் ஒரு மோசமான நிலை.

நாம் நம்முடைய ஒட்டுமொத்த உணவு உற்பத்தியில் 95 சதவிகிதத்தை மண்ணில் இருந்தே பெறுகிறோம். அப்படிப்பட்ட நிலையில் மண் வளம் இழந்து வருவதால், உணவு உற்பத்தியும் பாதிப்புக்கு உள்ளாகும்.

உலகின் பல்லுயிர் பெருக்கத்தில் கால் பங்கை வைத்திருக்கும் தாய் பூமியின் மேல் அடுக்கு ஆபத்தில் உள்ளது. மண் வளம் வேகமாக அழிந்து வருகிறது. மக்கள் ஆரோக்கியமாக இருக்கவும், அடுத்த தலைமுறையினருக்கு போதிய உணவு கிடைக்கவும் மண் வளம் மிகவும் அவசியம். எனவே சத்குரு மற்றும் அவரது பயணத்தில் இணைந்து நமது பங்கை ஆற்றி, நமது மண்ணைக் காப்பாற்றும் விஷயத்தில் உலகத்தின் கவனத்தையும் விழிப்புணர்வையும் ஈர்ப்போம்” என கூறியுள்ளார்.

இவர்களை போன்று சர்வதேச சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் சத்குரு மண் காப்போம் என்ற சர்வதேச இயக்கத்தை தொடங்கி உள்ளார். விவசாயம் செய்யும் மண்ணில் குறைந்தபட்சம் 3 முதல் 6 சதவிகிதம் கரிம வளம் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கங்கள் சட்டங்கள் இயற்ற வேண்டும் என சத்குரு வலியுறுத்தி வருகிறார்.

விளம்பர பகுதி

.

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

புதன் 22 ஜுன் 2022