மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

பணி வழங்கக் கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

பணி வழங்கக் கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

தேசிய ஊரக திட்டத்தில் பணி வழங்கக்கோரி, நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டிருந்தார்.

அப்போது நாங்குநேரி அருகே தோட்டாகுடி பஞ்சாயத்து மருதகுளம், தோட்டாகுடி, பாக்கியநாதபுரம் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, தங்களுக்கு தேசிய ஊரக திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்று கூறி அடையாள அட்டையுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள், ஆட்சியரிடம் எங்கள் கிராம மக்களுக்கும் தேசிய ஊரக திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

இந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்க வந்த மாற்றுத்திறனாளிகளை அமரவைத்து, அவர்கள் இருந்த இடத்துக்கே சென்று ஆட்சியர் விஷ்ணு மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

ராஜ்

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

புதன் 22 ஜுன் 2022