மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

துப்பாக்கிச் சூடு நடந்த பள்ளி இடிக்கப்படுகிறது!

துப்பாக்கிச் சூடு நடந்த பள்ளி இடிக்கப்படுகிறது!

டெக்சாஸின் உவால்டேயில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். தற்போது இந்த பள்ளி இடிக்கப்பட உள்ளதாக அந்த பள்ளியின் மேயர் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாயன்று நடந்த பள்ளி கவுன்சில் கூட்டத்தின் போது மேயர் டான் மெக்லாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அமெரிக்காவின் மிக மோசமான துப்பாக்கிச்சூடு சம்பவம் கடந்த மே 24 அன்று 18 வயதான சால்வடார் ராமோஸால் டெக்சாஸின் உவால்டேயில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்டது. இத்தாக்குதலின் போது போலீஸார் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்து தான் உள்ளே சென்றனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அவர்கள் தாமதிக்காமல் சால்வடாரை சுட்டிருந்தால் குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்று காவல்துறை மீது பொதுமக்கள் கோபம் அடைந்தனர்.

இதுகுறித்து டெக்சாஸின் பொதுப் பாதுகாப்புத் தலைவர் ஸ்டீவ் மெக்ரா கூறுகையில், "பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவனைத் தடுக்க போதுமான அதிகாரிகளும் உபகரணங்களும் இருந்தும் அவர்கள் தாமதப்படுத்தியது மிகவும் சோகமான ஒரு விஷயம்" என்று தெரிவித்திருந்தார்.

பள்ளிக்குள் நுழைந்து 4ஆம் வகுப்பு மாணவர்கள் மீது ரமோஸ் துப்பாக்கிச்சூடு நடத்திய போது சில மாணவர்கள் உயிர் பிழைப்பதற்காக இறந்தது போல நடித்தனர் என்று கேள்விப்பட்டதும் பெற்றோர்கள் துடித்து போயினர். இதை தொடர்ந்து உள்ளூர் காவல்துறை மீது மக்களின் கோபம் திரும்பியது. அவர்கள் முறையாக செயல்படாததால் தான் இத்தனை குழந்தைகளை இழக்க நேர்ந்தது என்று குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த பள்ளி எப்பொழுது இடிக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

புதன் 22 ஜுன் 2022