மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

சிப்காட் விரிவாக்கப் பணிக்கு நில ஆர்ஜிதம்: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

சிப்காட் விரிவாக்கப் பணிக்கு நில ஆர்ஜிதம்: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், பெரும்புலிமேடு கிராம பகுதியில் சிப்காட் விரிவாக்கப் பணிக்கு நில ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா, பெரும்புலிமேடு கிராம விவசாயிகள் சிப்காட் திட்ட அலுவலகம் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது பேசிய அவர்கள், "சிப்காட் நில விரிவாக்கத்துக்கு விளைநிலங்களைக் கையகப்படுத்த வேண்டாம் என பல்வேறு முறை கோரிக்கைகளை வைத்து வருகிறோம். ஆனால், செய்யாறு சிப்காட் விரிவாக்கப் பணிக்காக பெரும் புலிமேடு கிராமத்தில் பெரும் பகுதி கையகப்படுத்தப்பட்டுள்ளது.

ரோட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் பெரும்புலிமேடு கிராமத்தில் உள்ள நன்செய் நிலங்கள் மாமண்டூர் ஏரி பாசனத்தின்கீழ் உள்ளது. நிலத்தை கையகப்படுத்தினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்" என கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகளிடம், நில ஆர்ஜிதம் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர். விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

புதன் 22 ஜுன் 2022