மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

டெஸ்லா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு!

டெஸ்லா நிறுவனத்துக்கு எதிராக  வழக்கு!

டெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள், டெஸ்லா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். இந்த மாதத் தொடக்கத்தில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் வருங்கால பொருளாதாரத்தைக் குறித்து தனக்கு மோசமான உணர்வு இருப்பதாகக்கூறி 10 சதவிகித ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்படி நெவாடாவில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து டெஸ்லா நிறுவனம் மீது பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஒரு ஊழியரை பணி நீக்கம் செய்யும் முன்பு தொழிலாளர் சரி செய்தல் மற்றும் மறுபரிசீலனை அறிவிப்பு சட்டத்தின் கீழ் 60 நாட்கள் அறிவிப்பு காலம் வழங்க வேண்டும். 60 நாட்கள் அறிவிப்பு காலம் வழங்காமல் உடனடியாகப் பணி நீக்கம் செய்தது குறித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் அதிகம் பேரை பணி நீக்கம் செய்வது குறித்த கூட்டாட்சி சட்டங்களை டெஸ்லா நிறுவனம் கடைப்பிடிக்கத் தவறியதாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தொழிலாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மே மற்றும் ஜூன் மாதங்களில் அமெரிக்கா முழுவதும் முன்கூட்டியே அறிவிப்பு இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து முன்னாள் டெஸ்லா ஊழியர்களுக்கும் இந்த வழக்குக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் தொழிலாளர்கள் சார்பாக இந்த வழக்கில் வாதாடும் வழக்கறிஞர் ஷானன் லிஸ்-ரியார்டன் ராய்ட்டர்ஸ் கூறுகையில், "தேவையான அறிவிப்பை வழங்காமல் பல தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதன் மூலம் டெஸ்லா கூட்டாட்சி தொழிலாளர் சட்டத்தை மீறியது உறுதியாகிறது. இவ்வளவு பெரிய நிறுவனம் இப்படி செய்வது ஏற்க கூடியது அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

புதன் 22 ஜுன் 2022