மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

கிச்சன் கீர்த்தனா: கோவைக்காய் சப்ஜி!

கிச்சன் கீர்த்தனா:  கோவைக்காய் சப்ஜி!

காய்கறிகளை முதன்மையாகக்கொண்டு பலவிதமான சப்ஜிகளை உருவாக்கலாம். பெரும்பாலான காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவே உள்ளன. பீன்ஸ், கேரட், கொத்தவரங்காய், பூசணிக்காய், முள்ளங்கி, சுரைக்காய், வெள்ளரிக்காய், கோவைக்காய் போன்ற காய்கறிகள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இந்தக் காய்கறிகளை நீங்கள் விரும்பும் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் இந்த கோவைக்காய் சப்ஜி செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்; ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

என்ன தேவை?

கோவைக்காய் - 200 கிராம்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்

பொடியாக நறுக்கிய தக்காளி - ஒரு கப்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - மூன்று டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோவைக்காயை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து நறுக்கிய கோவைக்காயைச் சேர்த்துக் கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பின்பு நன்கு பிழிந்து ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும். கனமான கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய கோவைக்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு மூடிவைத்து, சிறு தீயில் வேகவிடவும். அவை வதங்கும்போது, இடையிடையே திறந்து கிளறி விடவும். கோவைக்காய் நன்கு வதங்கியதும் வெங்காயம், தக்காளியோடு சேர்ந்து தொக்கு போல் ஆனதும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: கஸூரி மேத்தி பிந்தி சப்ஜி!

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

புதன் 22 ஜுன் 2022