மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 ஜுன் 2022

உக்ரைன் சிறுவர்களுக்கு உதவ நோபல் பரிசை விற்கும் பத்திரிக்கையாளர்

உக்ரைன் சிறுவர்களுக்கு உதவ நோபல் பரிசை விற்கும் பத்திரிக்கையாளர்

நோவயா கெஸெட்டா என்னும் ரஷ்ய செய்தித்தாளின் தலைமை ஆசிரியரான டிமிட்ரி முரடோவ், உக்ரைனில் போரினால் இடம்பெயர்ந்த குழந்தைகளுக்குப் பயனளிக்கும் வகையில் தனது அமைதிக்கான நோபல் பரிசு தங்கப் பதக்கத்தை 103.5 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் விட்டார். நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் இந்த பதக்கம் விற்கப்பட்டது.

டிமிட்ரி முரடோவ் கடந்த 2021ஆம் ஆண்டில், பிலிப்பைன்ஸின் பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸாவுடன் இணைந்து "கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகள்" என்ற பிரிவில் இந்த நோபல் பரிசை வென்றார்.

கடந்த 1993ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு நோவயா கெஸெட்டாவை நிறுவிய பத்திரிகையாளர்கள் குழுவில் டிமிட்ரியும் ஒருவராவார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசியல் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சித்து பெயர் பெற்றவர் டிமிட்ரி. ரஷ்யாவிலும் கருத்து சுதந்திரத்திற்காக போராடியவர்.

டிமிட்ரி முரடோவ் பணிபுரியும் செய்தித்தாள் நிறுவனம் ரஷ்ய அதிபர் புதின் அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சனம் செய்யும். கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து இந்த செய்தித்தாள் நிறுவனங்கள் செயல்படவில்லை. ரஷ்ய படைகளுக்கு எதிராக எந்த ஒரு கருத்துக்களையும் பரப்ப அந்நாடு தடை விதித்ததால் இந்த செய்தித்தாள் நிறுவனம் தனது செயல்பாட்டை நிறுத்தியது.

இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவ தனது நோபல் பரிசை ஏலம் விடுவதற்கு டிமிட்ரி முடிவெடுத்து ஏலம் விட்டுள்ளார். இதில் வரும் தொகை நேரடியாக யுனிசெப் அமைப்பிற்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நோபல் பரிசு பெற்ற பொழுது இவருக்கு 5 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. பரிசுத் தொகையையும் அவர் அப்போதே யுனிசெப் அமைப்புக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

செவ்வாய் 21 ஜுன் 2022