மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 ஜுன் 2022

துப்பாக்கிச்சூட்டில் 230 பேர் உயிரிழப்பு!

துப்பாக்கிச்சூட்டில் 230 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 230 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பியா நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஆபிரிக்காவில் உள்ள சில பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால், அங்கு வசிக்கும் பல மக்கள் வெவ்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த வாரம்தான் வட கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் பகுதியில் உள்நாட்டு போர் சூழல் சற்று தணிந்திருந்த நிலையில், அங்கிருந்து வெளியேறிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர் ஆனால் அவர்கள் விட்டு சென்ற இடங்களை அரேபியர்கள் ஆக்கிரமித்திருந்ததால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு சூடான் பழங்குடியினருக்கும் அரேபியர்களுக்கும் நடந்த மோதலில் 125 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் எத்தியோப்பியாவில் நடந்த தாக்குதலில் 230 பேர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக எத்தியோப்பியாவில் உள்ள ஒரொமியா மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று பல கிளர்ச்சியாளர்கள் குழு செயல்பட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சியாளர்கள் அவ்வப்பொழுது பொதுமக்கள் மீதும், ராணுவ வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்நிலையில் ஒரொமியா மாகாணம் கிம்பி நகரில் உள்ள கிராமங்களுக்குள் திடீரென்று புகுந்த கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த மக்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 230 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அம்ஹரா எனப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் கடுமையான ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

திங்கள் 20 ஜுன் 2022