மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 ஜுன் 2022

ஐந்து வயதில் புத்தகம் வெளியிட்டு சாதனை படைத்த சிறுமி

ஐந்து வயதில் புத்தகம் வெளியிட்டு சாதனை படைத்த சிறுமி

இங்கிலாந்து நாட்டின் வெய்மௌத் நகரத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி புத்தகம் வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ஆறு வயதில் டோரதி ஸ்ட்ரெய்ட் என்பவரால் எழுதப்பட்ட புத்தகம்தான் மிக இளைய வயதில் எழுதப்பட்ட புத்தகத்துக்கான கின்னஸ் சாதனை படைத்து இருந்தது. இந்தச் சாதனையை பெல்லா ஜே டார்க் தனது 'தி லாஸ்ட் கேட்' என்ற புத்தகத்தின் மூலம் முறியடித்துள்ளார்.

பூனையைப் பற்றிய கதை கொண்ட இந்தப் புத்தகம் 1,000 பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது. கின்னஸ் உலக சாதனைக்கு பதிவு செய்ய புத்தகம் குறைந்தது 1,000 பிரதிகளுக்கு மேல் விற்று இருக்க வேண்டும் என்பது வரம்பு. 2022 ஜனவரி 31 அன்று பெல்லா ஜே டார்க் தனது புத்தகத்தை வெளியிட்டார். இது தற்போது 1,000 பிரதிகளைத் தாண்டி விற்பனையாகி கொண்டிருப்பதால் இது கின்னஸ் உலக சாதனைக்குத் தகுதி பெற்றது.

2016 ஜூலை 4 அன்று பிறந்த பெல்லா, வெறும் 5 ஆண்டுகள் மற்றும் 211 நாட்கள் கழித்து சுயமாக எழுதிய புத்தகம் 2022 ஜனவரி 31 அன்று இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

இதற்கு முன்பு டோரதி ஸ்ட்ரெய்ட் , தனது ஆறு வயதில் எழுதி கடந்த 1964ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புத்தகம்தான் மிக இளைய வயதில் எழுதப்பட்ட புத்தகத்துக்கான சாதனை படைத்திருந்தது. சரியாக 58 வருடங்கள் கழித்து இந்த சாதனை முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

வெள்ளி 17 ஜுன் 2022