மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 ஜுன் 2022

தென்னை விவசாயிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை தேவை!

தென்னை விவசாயிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை தேவை!

தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தென்னை விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகரில் நடந்த தென்னை விவசாயிகள் சங்க மாநில அமைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகரில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில அமைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசிய மாநில அமைப்பாளர் விஜயமுருகன், "தமிழகத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூ. 20 வரை விற்பனையான தேங்காய் தற்போது ரூ. 8 மற்றும் ரூ.9-க்கு விற்பனையாகிறது. கொப்பரை தேங்காய் கிலோ ரூ.105-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு தேங்காய் கொள்முதல் நிலையங்களை அமைத்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரை கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் 4 லட்சத்து 60,000 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. எனவே தமிழக அரசே தேங்காய் கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்களை அமைத்து தென்னை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.

ராஜபாளையம் மற்றும் சாத்தூரில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சாத்தூரில் தென்னை விவசாயம் இல்லாத நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதை வத்திராயிருப்புக்கு மாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே தமிழக அரசு வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 30ஆம் தேதி உடுமலைப்பேட்டையில் தென்னை விவசாயிகள் சங்க மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது" என்று அவர் கூறினார்.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 9 ஜுன் 2022