மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 ஜுன் 2022

கேரளத்தில் மதிய உணவு மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு!

கேரளத்தில் மதிய உணவு மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு!

கேரளத்தில் மதிய உணவு சாப்பிட்ட 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில் மதிய உணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தற்போது அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் அவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் விஷம் கலந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு உடனே விரைந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாணவர்கள் சாப்பிட்ட உணவையும், தண்ணீரையும் பரிசோதனைகளுக்காக சேகரித்தனர்.

இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "18 மாணவர்கள் மதிய உணவு உண்ட பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் உண்ட உணவில் விஷம் கலந்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஆகையால், மாணவர்கள் சாப்பிட்ட உணவையும், தண்ணீரையும் பரிசோதனைகளுக்காக அனுப்பியுள்ளோம். பரிசோதனைகளின் முடிவில்தான் இதற்குரிய உண்மையான காரணம் தெரியவரும். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கேரளத்தில் அழுகிய இறைச்சி சாப்பிட்ட ஒருவர் இறந்தார். தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் அழுகிய இறைச்சி குறித்து கேரள சுகாதாரத் துறை சோதனை நடத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கொல்லம் மாவட்டம் கொட்டாக்கரா பகுதியிலுள்ள அங்கன்வாடியில் 8 மாணவிகள் மதிய உணவு சாப்பிட்ட பிறகு மயக்கம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

திங்கள் 6 ஜுன் 2022