மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 ஜுன் 2022

கிச்சன் கீர்த்தனா: நாட்டுக் கதம்ப சாதம்

கிச்சன் கீர்த்தனா: நாட்டுக் கதம்ப சாதம்

துரித உணவு மோகத்தில் தொலைந்துகொண்டிருந்த நம்மை மீட்டெடுத்ததில் லாக்டௌனுக்குப் பெரும்பங்கு உண்டு. ஆரோக்கியமாகச் சாப்பிட்டாக வேண்டிய அவசியத்தை உணர்த்திய லாக்டௌன், அத்தகைய உணவுகளைத் தேடி ஓடவும் வைத்ததுதான் நிஜம். அந்தத் தேடலில் பலரும் கண்டெடுத்தவை வீட்டிலேயே செய்யக்கூடிய பாரம்பர்ய உணவுகள். அவற்றில் ஒன்று எளிதாகச் செய்யக்கூடிய இந்த நாட்டுக் கதம்ப சாதம்.

என்ன தேவை?

பச்சரிசி - 200 கிராம்

துவரம்பருப்பு - 100 கிராம்

பாசிப்பருப்பு - 50 கிராம்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காய், பரங்கிக்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், சேனைக்கிழங்கு போன்ற நாட்டுக் காய்கள் - 300 கிராம்

வேகவைத்த மொச்சை - 100 கிராம்

புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு

சாம்பார்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

வெல்லம் - ஒரு சிறிய துண்டு

வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)

தக்காளி - 2

வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை - சிறிதளவு

பூண்டு - 10 பற்கள்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க...

கடலை எண்ணெய் - தேவையான அளவு

கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்

நெய் - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

முதலில் ஒரு குக்கரில் பச்சரிசி, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், துருவிய இஞ்சி, சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரை விட்டு இறக்கவும். பிறகு ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கி, இதனுடன் நறுக்கிய காய்கறி கலவை, வேகவைத்த மொச்சை சேர்த்து வதக்கவும். இதில் சாம்பார்த்தூள், சிறிதளவு உப்பு, புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு இரண்டு விசில்விட்டு எடுக்கவும். பிறகு இதை வேகவைத்த பருப்பு சாதத்தில் ஊற்றி கலந்து நன்கு மசித்து, தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைக்கொண்டு தாளிதம் செய்து சேர்த்து இறக்கவும். இதன்மீது கொத்தமல்லி, கறிவேப்பிலை, வறுத்த வேர்க்கடலை மற்றும் வெல்லம், நெய் சேர்த்துக் கிளறியெடுத்தால் வீடே கமகமக்கும் நாட்டுக் கதம்ப சாதம் தயார். இதற்கு வற்றல், அப்பளம் பெஸ்ட் சைடிஷ்.

எடைக்குறைப்புக்கு உதவுமா திரவ உணவுகள்?

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

திங்கள் 6 ஜுன் 2022