மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 ஜுன் 2022

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ விழிப்புணர்வு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ விழிப்புணர்வு

உலக நாடுகள் மண்வளத்தை மீட்டெடுக்க சட்டங்களை இயற்ற வலியுறுத்தி 'மண் காப்போம்' என்ற இயக்கத்தை சத்குரு தொடங்கினார். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த 27 நாடுகளுக்கு 30 ஆயிரம் கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார் சத்குரு. இந்த பயணம் 100 நாட்களுக்கு நீடித்தது. லண்டனில் இருந்து தொடங்கி இந்தியா வரை இந்த பயணம் நீண்டது. உலகமே அந்த 100 நாட்களுக்கு மண்வளத்தை பற்றி பேச வேண்டும் என்று சத்குரு வலியுறுத்தினார். 65 வயதில் இந்த பயணத்தை மேற்கொண்ட சத்குருவுக்கு உலக அளவில் பல பேரிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்தன.

வருகிற ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. முன்னிட்டு சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் மண் வளம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மண்வளப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மயிலாப்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை 55 கிலோ மீட்டருக்கு சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் வருகிற 5ஆம் தேதிக்குள் இரண்டு லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்கின்றனர்.

மேலும் சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் வருகிற 5ஆம் தேதி சேலம் மற்றும் கோவை விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்படுகிறது. உலகம் தற்போது இருக்கும் சூழலில் மண் வள பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் அவசியம். சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு உலகில் 74 நாடுகள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

சனி 4 ஜுன் 2022