மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 ஜுன் 2022

உளுந்து கழிவுகளில் வருமானம் ஈட்டும் விவசாயிகள்!

உளுந்து கழிவுகளில் வருமானம் ஈட்டும் விவசாயிகள்!

விருதுநகர் மாவட்டம், தாயில்பட்டி பகுதிகளில் உளுந்து கழிவுகளை விற்று விவசாயிகள் வருமானம் ஈட்டிவருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தாயில்பட்டி, பூசாரிநாயக்கன்பட்டி, ஜமீன்கல்லமநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, சுப்பிரமணியபுரம், இறவார்பட்டி, வல்லம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்தப் பகுதியில் உளுந்து அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்ட உளுந்து கழிவுகள் மாட்டு தீவனத்துக்காக கிலோ ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த உளுந்து கழிவுகள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு சத்தான உணவாக குறைந்த விலைக்குக் கிடைப்பதால் அருகில் உள்ள கிராமங்களில் கால்நடை வளர்ப்பவர்கள் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலை குறித்து பேசியுள்ள விவசாயிகள், "தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உளுந்தினை சாகுபடி செய்து அறுவடை செய்து விட்டோம். செடியில் இருந்து உளுந்தினை பிரித்து விட்டு மீதி உள்ள கழிவுகளை விற்று வருகிறோம். கால்நடை வளர்ப்பவர்கள் அவற்றுக்கு உணவுக்காக இதை வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் உபரி வருமானம் கிடைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது" என்று கூறியுள்ளனர்.

-ராஜ்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 3 ஜுன் 2022