மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 ஜுன் 2022

கேரள லாட்டரியில் ரூ.10 கோடி பெற்ற கன்னியாகுமரி டாக்டர்!

கேரள லாட்டரியில் ரூ.10 கோடி பெற்ற கன்னியாகுமரி டாக்டர்!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தற்செயலாக வாங்கிய கேரள லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக 10 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அருகில் இருக்கும் கேரள மாநிலத்தில் அரசின் அனுமதியுடன் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில், ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் மெகா பம்பர் என்ற பெயரில் பரிசு சீட்டு விற்பனை நடக்கும். அதன்படி கேரளாவின் விஷு பண்டிகையை முன்னிட்டு முதல் பரிசாக 10 கோடி ரூபாய்க்கான சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

மொத்தம் 43,69,000 பரிசு சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. முதல் பரிசாக 10 கோடி ரூபாயும், இரண்டாம் பரிசாக 50 லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசாக 5 லட்சம் ரூபாய் வீதம் 12 பேருக்கு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட மொத்தம் 34 கோடி ரூபாய்க்கு பரிசுகள் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு மெகா பம்பர் டிக்கெட்டுகள் விற்பனை அமோகமாக இருந்ததால் 250 கோடி ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

மே 22ஆம் தேதி இந்த லாட்டரியின் குலுக்கல் நடைபெற்றது. அதில், எச்பி 727990 என்ற எண்ணுக்கு முதல் பரிசாக 10 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனால் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது குறித்து அறிந்துகொள்ள ஒட்டுமொத்த கேரளாவே எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஆனால் பரிசு பெற்ற சீட்டுடன் ஒரு வாரமாக யாரும் வராததால் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது குறித்த சஸ்பென்ஸ் நீடித்தது.

முதல் பரிசு பெற்ற லாட்டரி சீட்டு, திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே உள்ள வல்லக்கடவு ரங்கன் என்பவரின் சில்லறை விற்பனைக் கடையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது. அதனால் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரோ அல்லது வெளிநாட்டுக்குச் சென்றவரோ லாட்டரி சீட்டு வாங்கியிருக்கலாம் என்ற பேச்சு எழுந்தது அதனால் பரிசு வென்ற சீட்டுக்குச் சொந்தக்காரர் குறித்த பரபரப்பு கேரளா முழுவதும் நிலவியது.

இந்தச் சூழலில், பரிசுச் சீட்டுக்குச் சொந்தக்காரர் குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த டாக்டர் பிரதீப்குமார் என்பது தெரியவந்திருக்கிறது. முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் அவர் தாமதமாகவே தனக்கு பரிசு விழுந்திருப்பதை அறிந்துள்ளார். அதனால் திருவனந்தபுரம் லாட்டரி துறையில் அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளதால் அவருக்கான பரிசுத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாக்டர் பிரதீப்குமார் தனது உறவினரான ரமேஷ் என்பவருடன் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குச் சென்றபோது இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். அதனால் இருவரின் பெயரிலும் கூட்டாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அதில் வரிகள் நீங்கலாக மொத்தம் ரூ.6,16,00,000 டெபாசிட் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள பரிசு வென்ற டாக்டர் பிரதீப்குமார், “பொதுவாக எனக்கு லாட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் கிடையாது. என் உறவினர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்ததால் அவரை வரவேற்க நானும் என் உறவினர் ரமேஷும் விமான நிலையம் சென்றிருந்தோம். நாங்கள் சீக்கிரமே சென்று விட்டதால் விமான நிலையம் அருகில் டீக்குடிக்க கடையில் நின்றிருந்தோம்.

அப்போது அங்குள்ள ஒரு லாட்டரி சீட்டு விற்பனைக் கடையில் விஷு மெகா பம்பர் பற்றி அறிவித்தபடி விற்பனை நடந்தது. நிறைய பேர் சீட்டுகளை வாங்கினார்கள். நாமும் ஒரு சீட்டு வாங்குவோமே என நினைத்து இருவரும் சேர்ந்து சீட்டு வாங்கினோம். அதன் பிறகு அதை மறந்துவிட்டோம். திடீரென 10 கோடிக்கான அதிர்ஷ்டசாலியைத் தேடுவது பரபரப்பானதால் எங்களுடைய சீட்டை எடுத்துப் பார்த்தபோது அது தான் முதல் பரிசுக்கான சீட்டு என்பதை அறிந்தோம்.

எனக்கு அதிர்ஷ்டத்தின் மீது அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. அதனால் நான் அந்தச் சீட்டை மறந்து போயிருந்தேன். எங்களுக்கு முதல் பரிசு கிடைத்த விவரமே மூன்று நாளுக்குப் பிறகு தான் தெரியவந்தது. எங்கள் ஊரில் நடந்த கோயில் திருவிழா மற்றும் கிராமத்தில் நடந்த ஒரு மரணம் ஆகியவை காரணமாக உடனடியாக கேரளாவுக்குச் செல்ல முடியவில்லை.

நாங்கள் சென்று லாட்டரி டிக்கெட்டை கொடுத்ததும் எங்களுக்கான பரிசுத் தொகையை வங்கியில் செலுத்தும் நடவடிக்கைகளை லாட்டரி துறை மேற்கொண்டு வருகிறது. இந்த பரிசு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அதிர்ஷ்டத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

-ராஜ்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 2 ஜுன் 2022