மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 ஜுன் 2022

திருப்பதியில் லட்டு தட்டுப்பாடு!

திருப்பதியில் லட்டு தட்டுப்பாடு!

கடந்த வாரம் இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் தங்கள் குடும்பங்களுடன் தரிசனத்திற்காக வந்தனர். இதனால் கடந்த வார இறுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதன் காரணமாக பக்தர்கள் 48 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் சேவையை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை வழங்கியது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று 89,318 பெரும், சனிக்கிழமை அன்று 90,885 பேரும், ஞாயிற்றுக்கிழமை அன்று 74,823 பேரும் தரிசனம் செய்தனர். இந்த மூன்று நாட்களையும் சேர்த்து சுமார் 15 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக வசூலானது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரத்திற்கு பிறகு திருப்பதியில் லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஒரு இலவச லட்டை தவிர, ஒரு லட்டு 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினமும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த வார இறுதி தினமும் 7 முதல் 8 லட்சம் லட்டுகள் வரை விற்பனையானது. இதனால் திருப்பதியில் தற்போது லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு இலவச லட்டு உட்பட மூன்று லட்டுகளை மட்டுமே ஒரு பக்தருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக கேட்கும் பக்தர்களுக்கு லட்டுகள் மறுக்கப்படுகிறது.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 2 ஜுன் 2022