கிச்சன் கீர்த்தனா: ரவா பக்கோடா!

இயற்கை உருவாக்குவதும், மனிதன் உருவாக்குவதும்தான் உணவே தவிர, இயந்திரங்கள் உருவாக்குவது உணவல்ல. ஆனால், இயந்திரங்கள் உருவாக்கும் பதப்படுத்தப்படுத்த உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறோம். இதைத் தவிர்த்து வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய இந்த ரவா பக்கோடா செய்து ருசிக்கலாம்.
என்ன தேவை?
ரவை - ஒரு கப்
தயிர் - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தேங்காய்ப் பற்கள் - கால் டீஸ்பூன்
சமையல் சோடா - 2 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
உப்பு - ஒரு டீஸ்பூன்
ரீபைண்டு ஆயில் - பொரிக்கத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
ரவையைத் தயிரில் 15 நிமிடங்கள் ஊறவிடவும். இதனுடன் எண்ணெயைத் தவிர மற்ற பொருட்களைச் சேர்த்து, பக்கோடா மாவுப் பதத்துக்குக் கலந்துகொள்ளவும். பின்னர் மாவைச் சூடான எண்ணெயில் சிறுசிறு பக்கோடாக்களாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.