மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 ஜுன் 2022

சத்துணவு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகை கிடைப்பது எப்போது?

சத்துணவு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகை கிடைப்பது எப்போது?

விருதுநகர் மாவட்டத்தில் பணி ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களிடம் பிடித்த செய்த தொகை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணி ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பணி ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஒன்று திரண்டு சங்கத் தலைவர் அய்யம்மாள் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள அந்த மனுவில், "பணி ஓய்வு பெறும்போது தரப்பட வேண்டிய ஒட்டுமொத்த தொகை ரூ.1 லட்சத்தில் ரூ.10,000 பிடித்தம் செய்து ரூ. 90,000 மட்டும் கொடுக்கப்பட்டது. தற்போது நாங்கள் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்திய பின்பும் பிடித்தம் செய்த தொகையை தர அதிகாரிகள் மறுக்கும் நிலை உள்ளது.

மாத ஓய்வூதியத்தை மாதாமாதம் வழங்காமல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கும் நிலை உள்ளது. மேலும் சேமநல நிதி தொகையை வழங்குவதற்கும் கால தாமதப்படுத்தப்படுகிறது. இதனால் பணி ஓய்வு பெற்றவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளதால் பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும்" என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.

-ராஜ்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 1 ஜுன் 2022