மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 ஜுன் 2022

உரம் ஒதுக்கீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

உரம் ஒதுக்கீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், "உரம் ஒதுக்கீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

"காவிரி டெல்டாவில் தூர்வாருவதற்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்து மே மாதமே தூர்வாரும் பணியைத் தொடங்கியதை வரவேற்கிறோம். தூர்வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதை வரவேற்கிறோம்.

கிராமங்களில் ஏரிகள், நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், நீர்நிலைகளை நிரப்புவதற்கு முன்னுரிமை கொடுத்து தண்ணீர் பங்கீட்டை செயல்படுத்த வேண்டும். இருக்கும் தண்ணீரைக் கொண்டு சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கும் வகையில் சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், கூட்டுறவு அமைப்புகள் மூலம் உரம் ஒதுக்கீடு செய்வதை அரசு கட்டாயமாக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

-ராஜ்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 1 ஜுன் 2022