மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 ஜுன் 2022

புதிதாக வரும் 500 ரூபாய் நோட்டுகள்!

புதிதாக வரும் 500 ரூபாய் நோட்டுகள்!

கடந்த 2016ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. கள்ள நோட்டு புழக்கத்தை இது தடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக இந்தப் பணமதிப்பு நீக்கம் செயல்படுத்திய பின்னர் இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி இந்தியாவில் புதிய 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் 100 சதவிகிதமும், 2000 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் 50 சதவிகிதமும் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 625 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் கிளம்பின.

இந்த நிலையில் இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கத்தைக் குறைக்க 500 ரூபாய் நோட்டுகளில் மாற்றம் கொண்டுவர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவிலிருந்து காகிதங்கள் மற்றும் மை கொள்முதல் செய்யப்படுகின்றன. இவை பண நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை உறுதிபடுத்தும். இந்தியாவில் தற்போது 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிட படுவதில்லை ஆகையால் 500 ரூபாய் நோட்டுகளை மட்டும் கூடுதல் பாதுகாப்போடு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கத்தை குறைத்து முற்றிலுமாக அகற்றிவிட்டால் இந்தியாவின் பொருளாதாரமும், பண மதிப்பும் வெகுவாக உயரும். இந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

புதன் 1 ஜுன் 2022