மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 ஜுன் 2022

விசைத்தறிகள் நிறுத்தம்: 900 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு!

விசைத்தறிகள் நிறுத்தம்: 900 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு!

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 22ஆம் தேதி முதல் வருகிற 5ஆம் தேதி வரை 15 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். தமிழகத்தில் இயங்கும் 6 லட்ச விசைத்தறிகளில் சுமார் 60 லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் விவசாயிகளுக்கு அடுத்து தொழில்துறையில் அதிகப்படியாக ஜவுளித்துறை உள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தொழிலாளர்கள் பிரச்சினை, வங்கிக் கடன்கள், துணிக்கு உரிய விலை கிடைக்காதது என்று ஏற்கனவே விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவில் நூல் விலை கடந்த 18 மாதங்களாக உயர்ந்து வந்தது. இது ஜவுளித்துறைக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது. இந்த நிலையில் நூல் விலை உயர்வை எதிர்த்தும், நூல் விலையைக் கட்டுப்படுத்த கோரியும் விசைத்தறி தொழிலாளர்கள் 15 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் நேற்று வரை 9 நாட்கள் முடிந்து இன்று 10ஆவது நாளாக நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் மட்டும் 900 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் போராட்டத்தினால் விசைத்தறி தொழிலாளர்கள் மட்டுமின்றி, அவர்கள் சார்ந்திருந்த விற்பனையாளர்கள், வாகன ஓட்டிகள், உதிரிபாக விற்பனையாளர்கள் என்று பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நூல் விலையை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டுவந்து ஜவுளித்துறையைக் காப்பாற்ற வேண்டும் என்று விசைத்தறி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

புதன் 1 ஜுன் 2022