மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 மே 2022

சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய மொழி நாவல்!

சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய மொழி நாவல்!

சர்வதேச புகழ்பெற்ற இலக்கிய விருதான புக்கர் பரிசு, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அல்லது மொழி பெயர்க்கப்பட்டு, பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.

இந்த சர்வதேச விருதை இந்த வருடம் இந்தியப் பெண்மணியான இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளார். இவருடைய Tomb of Sand (ரேத் சமாதி) நாவல் சர்வதேச புக்கர் பரிசை வென்றிருக்கிறது. பரிசுத்தொகை 50,000 பவுண்ட் நாவலாசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளர் டெய்ஸி ராக்வெல்லுக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்திய மொழி ஒன்றிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவல் சர்வதேச புக்கர் பரிசு வெல்வது இதுவே முதல் முறை.

மொழிபெயர்ப்பு நூலுக்கான புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய எழுத்தாளர் என்ற பெருமையையும் கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளார்.

இந்த நாவல் இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 80 வயதான பெண் தன் கணவர் இறந்த பின்பும் வாழ்ந்து எதிர்கொள்ளும் சம்பவங்களை, ஒரு குடும்ப கதை வடிவில் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ. இந்த சர்வதேச புக்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய புத்தகம் இதுவாகும். இந்தப் புத்தகத்துக்கு 50,000 பவுண்ட் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சமாகும். இந்தப் பரிசுத் தொகை எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும்.

இதுகுறித்து விருந்து வென்ற எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ பேசுகையில், “நான் தனிமையிலும் அமைதியிலும் வாழும் எழுத்தாளர். எனக்கு புக்கர் பரிசு கிடைத்திருப்பது பெரிய அங்கீகாரம். புக்கர் பரிசு தேர்வுக்கு எனது புத்தகம் அனுப்பி வைக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, நான் அதை வெல்வேன் என்றும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், பணிவாகவும் உணர்கிறேன். எனக்கும் இந்தப் புத்தகத்துக்கும் பின்னால், இந்தி மற்றும் பிற தெற்காசிய மொழிகளின் வளமான இலக்கிய பாரம்பரிய தொடர்புள்ளது” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

நேற்றைய பதிப்பின் சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய எழுத்தாளர் திருத்தம்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

ஞாயிறு 29 மே 2022