மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 மே 2022

கொரோனாவை கையாண்ட விதம் : இந்தியாவை பாராட்டிய பில் கேட்ஸ்!

கொரோனாவை கையாண்ட விதம் : இந்தியாவை பாராட்டிய பில் கேட்ஸ்!

உலகம் முழுவதும் 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு தலைவிரித்து ஆடியதால், ஊரடங்கு போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆகையால் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கியது. தற்போது இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது ஆனாலும் நான்காம் அலை ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் வரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக 193 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது உலக அளவில் மிக பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும், தடுப்பூசி செலுத்த கையாளும் வழிமுறைகளையும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வெகுவாக பாராட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற நிகழ்வில் பங்கேற்ற மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்தபோது இந்தியாவின் தடுப்பூசி சாதனையை பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பில் கேட்ஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மன்சுக் மாண்டவியாவை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுகாதார விளைவுகளை அளவிடுவதில் இந்தியாவின் வெற்றி ஆகியவை உலகிற்கு பல படிப்பினைகளை வழங்குகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

பில் கேட்ஸ் சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மன்சூக் மாண்டவியா, “டிஜிட்டல் வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நோய் கட்டுப்பாடு மேலாண்மை, மலிவு மற்றும் தரமான நோயறிதல் முறை மற்றும் மருத்துவ சாதனங்களின் மேம்பாட்டை வலுப்படுத்துதல் உள்பட சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் விவாதித்தோம். இந்தியாவின் கொரோனா நடவடிக்கைகளை அவர் வெகுவாக பாராட்டினார்.” என்று தெரிவித்துள்ளார்.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

ஞாயிறு 29 மே 2022