மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 மே 2022

மனைவி, குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட ஐடி ஊழியர்!

மனைவி, குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட ஐடி ஊழியர்!

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. 41 வயதுடைய பிரகாஷ் என்பவர் தன் மனைவி, குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஒரு ஐடி ஊழியர். இவருடைய மனைவி காயத்ரி அதே பகுதியில் நாட்டு மருந்துக்கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு 13 வயதான நித்யஸ்ரீ என்ற மகளும், 9 வயதான ஹரிகிருஷ்ணன் என்ற மகனும் இருந்தனர்.

பிரகாஷுக்கு அதிகமாக கடன் தொல்லை இருந்து வந்த நிலையில் அவர் பண நெருக்கடியில் சிக்கி தவித்தார். இதனால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். கடன் தொல்லை தாங்க முடியாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, ஆன்லைனில் மரம் அறுக்கும் ரம்பம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு குழந்தைகள் தூங்கிக்கொண்டிருக்கும்போது மரம் வெட்டும் ரம்பத்தால் அவர்களது கழுத்துகளை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தன் மனைவியையும் கொன்றுவிட்டு, அதே ரம்பத்தால் தன் கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று காலை வீடு கதவு திறந்திருந்தும் யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அனைவரும் கழுத்து அறுக்கப்பட்டு வீடே ரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு உடனே தகவல் தெரிவிக்க, போலீஸார் அந்த இடத்துக்கு விரைந்து உடல்களைக் கைப்பற்றி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 29 மே 2022