மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 மே 2022

போதை விருந்து தொடர்பாக கைதான ஆர்யன் கான் விடுதலை

போதை விருந்து தொடர்பாக கைதான ஆர்யன் கான் விடுதலை

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று சொகுசு கப்பலில் போதைப்பொருள் கொண்டு விருந்து நடத்தப்படுவதாக செய்தியறிந்த போலீசார் மும்பையிலிருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஆர்யன் கான் உட்பட 6 பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கில் 14 குற்றவாளிகள் பெயர்களையும் குறிப்பிட்டு 6000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தாக்கல் செய்திருந்தது ஆனால் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 சொகுசு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த புலனாய்வு குழு, இந்த வழக்கில் கடுமையான முறைகேடுகளும், சில செல்வாக்கு உடையவர்களின் தலையீடுகளும் நடந்துள்ளன என்று தெரிவித்துள்ளது. மேலும் ஆர்யன் கானை கைது செய்தது முதல் அதிகாரிகள் குழு எந்த விசாரணை விதிமுறைகளையும் ஒழுங்காக பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் அதிகாரிகளில் ஒருவர், இந்த வழக்கு சார்பாக லஞ்சம் வாங்க முயன்றதாக ஆதாரங்களுடன் பிடிபட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நிலையில், இந்த 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மருத்துவப் பரிசோதனை, ரெய்டுகளின் வீடியோ பதிவுகளில் இவர்கள்தான் குற்றவாளிகள் என்று நிரூபிக்கும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளின் வாட்ஸ்ஆப் உரையாடல்களிலும் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

சனி 28 மே 2022