மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 மே 2022

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் கொரோனா பாதிப்பு தினமும் ஏற்றம் கொண்டுவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஐடி கான்பூர் ஆய்வாளர்கள், இந்தியாவில் கொரோனா நான்காம் அலை ஜூலை மாதத்தில் வர வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தனர். அதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பது சற்று அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், சென்னையிலும் அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணாநகர், பெருங்குடி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 93.74 சதவீதம் முதல் தவணையும், 82.55 சதவீதம் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு நம் கையிலிருக்கும் ஒரே ஆயுதம் கொரோனா தடுப்பூசிகள் மட்டும் தான், ஆகையால் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் அனைவரும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து எல்லா

பேட்டிகளிலும் அறிவுறுத்தி வருகிறார்.

தமிழகத்தில் 13 லட்சம் பேர் இன்னும் பூஸ்டர் டோஸ் செலுத்தவில்லை, அவர்களை கண்டெடுத்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். தமிழகத்தில் இன்னும் 18 வயதுக்கு மேற்பட்ட 43 லட்சம் பேர் முதல் தவணையும், 1.22 கோடி பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

சனி 28 மே 2022