மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 மே 2022

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

‘ஜூம்’ வாடகை கார் நிறுவனம், நவம்பர் 2020 முதல் 2021 வரை ஓர் ஆண்டு முழுக்க சுமார் இந்தியாவில் உள்ள 22 நகரங்களில் போக்குவரத்து குறித்து ஒரு சர்வே நடத்தியிருக்கிறது. அதில் மோசமான டிரைவிங்கில் முக்கியமான நகரமாக சென்னை ஆறாவது இடம் பெற்றிருக்கிறது.

சென்னையில் தினமும் 12 விபத்துகளுக்குக் குறையாமல் பதிவாகின்றனவாம். இதில் மோசமான உயிரிழப்புகளும் அடக்கம். இந்த 12 விபத்துகளில் சுமார் 10 விபத்துகள் டிரைவர்களின் அலட்சியத்தாலும், மோசமான டிரைவிங்காலும்தான் ஏற்பட்டிருக்கின்றன என்றும் சொல்கிறது அந்தப் புள்ளி விவரம். சென்னையில் 12.3 சதவிகிதம் மோசமான வாகன ஓட்டிகளும், நல்ல டிரைவர்கள் 23.6 சதவிகிதப் பேரும், சுமாரான ஆவரேஜ் டிரைவர்கள் 64.1 சதவிகிதப் பேரும் இருக்கிறார்களாம்.

இதில் 18.5 சதவிகிதம் என்ற கணக்கில் மோசமான டிரைவர்களுடன் முதலிடத்தில் இருப்பது மைசூர். 14.8 சதவிகிதத்துடன் அகமதாபாத் இரண்டாவது இடத்திலும், 14.0 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தில் பெங்களூரும் இருக்கிறது. நான்காவது இடத்தில் ஜெய்ப்பூரும், ஐந்தாவது இடத்தில் விசாகப்பட்டினமும், ஆறாவது இடத்தில் சென்னையும் அடுத்து ஏழாவது இடத்தில் கோயம்புத்தூரும் இருக்கின்றன.

இதில் நல்ல டிரைவர்கள் கொண்ட மாவட்டமாக, மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தோர் முதலிடத்தில் இருக்கிறது. இங்கேதான் இந்தியாவிலேயே அதிகப்படியாக 35.4 சதவிகிதம் அருமையான டிரைவர்கள் இருக்கிறார்களாம். இதற்குக் காரணம், இங்கே டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் விதம். மத்தியப்பிரதேசத்தில் ஆட்டோமேட்டட் டிரைவிங் டெஸ்ட் ட்ராக்குகளில் கார் / பைக் ஓட்டி நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் இங்கே டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

-ராஜ்

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

சனி 28 மே 2022