மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 மே 2022

டாஸ்மாக்கை அகற்ற கோரிய பொதுமக்கள்!

டாஸ்மாக்கை அகற்ற கோரிய பொதுமக்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே வேங்கூர் கிராமத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் மதுவாங்கி குடித்துவிட்டு வருபவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளையும் உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 27 மே 2022