மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 மே 2022

திருப்பூர் மார்க்கெட்டில் குவிந்த 12 டன் சுரைக்காய்!

திருப்பூர் மார்க்கெட்டில் குவிந்த 12 டன் சுரைக்காய்!

திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதியில் சுரைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு சுமார் 12 டன் சுரைக்காய் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. 15 கிலோ எடை கொண்ட சுரைக்காய் பை ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர், பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் தினசரி மார்க்கெட் உள்ளது. திருப்பூர் மாநகரின் பிரதான மார்க்கெட்டாக இது உள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு விற்பனைக்காக பல்வேறு வகையான காய்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. பெருமாநல்லூர், குன்னத்தூர், வேங்கிபாளையம், கொடுவாய், குண்டடம், படியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சுரைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு சுரைக்காய் வரத்து அதிகமாக இருந்து வருகிறது. மொத்த விற்பனை மார்க்கெட்டுக்கு நேற்று சுமார் 12 டன் சுரைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவை சுமார் 15 கிலோ எடை கொண்ட பைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டது. அதிக அளவில் சுரைக்காய் வந்ததால் மார்க்கெட்டில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பச்சை பசேல் என சுரைக்காய் காட்சியளித்தது.

வழக்கத்தை விட நேற்று சுரைக்காய் விலை வெகுவாக குறைந்தது. மொத்த விற்பனை விலையாக 15 கிலோ எடை கொண்ட சுரைக்காய் பை வழக்கமாக ரூ.200 முதல் ரூ.250 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரு பை ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் காயின் தரத்தைப் பொறுத்து சில சுரைக்காய் பைகள் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக இருந்ததால் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று சுரைக்காய் வேகமாக விற்று தீர்ந்தன. ஆனால், ஒரு பைக்கு ரூ.100 வரைக்கும் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 27 மே 2022