மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 மே 2022

செலவைக் குறைக்கும் டிரோன் மூலம் விதை நெல் தெளிப்பு!

செலவைக் குறைக்கும் டிரோன் மூலம் விதை நெல் தெளிப்பு!

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே டிரோன் மூலம் விதை நெல் தெளிக்கப்படுவதால் சாகுபடி செலவு குறைகிறது என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய ரூ.30,000 செலவாகிறது. இந்த நிலையில் சாகுபடி செலவைக் குறைக்கும் வகையில் அய்யம்பேட்டை அருகே உள்ளிக்கடை கிராமத்தில் உள்ள ஒரு வயலில் டிரோன் மூலம் விதை நெல் தெளிக்கப்பட்டது. பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய இந்த டிரோன் ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது. சேற்று உழவு செய்த வயலில் தெளிப்பதற்காக இந்த டிரோனில் விதை நெல் நிரப்பப்படுகிறது. ஒருமுறை தெளிக்க 7 கிலோ விதை நெல் டேங்கில் நிரப்பப்படுகிறது. இரண்டு டேங்குகளைக் கொண்டு ஒரு ஏக்கரில் நெல் விதைக்கப்படுகிறது. இதன் மூலம் உள்ளிக்கடை கிராமத்தில் நான்கு ஏக்கரில் விதை நெல் தூவப்பட்டது.

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் ஊராட்சி தலைவர் எஸ்.டி.ஜெயக்குமார், "ஒரு ஏக்கருக்கு ஆட்கள் மூலம் வயலில் விதை நெல் விதைக்க ரூ.2,000, நாற்று பறிக்க ரூ.2,000, நடவு பணிக்கு ரூ.3,000 என மொத்தம் ரூ.7,000 செலவாகிறது. டிரோன் மூலம் நேரடி விதைப்பு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.2,100 தான் செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு 14 கிலோ விதை நெல் போதுமானது. மேலும் களைக்கொல்லி, பூச்சி மருந்து அடிக்கவும், உரம் தெளிக்கவும் டிரோனை பயன்படுத்தலாம். விவசாயப் பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு நிலவும் தற்போதைய சூழலில் டிரோனின் பயன்பாடு அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.

ராஜ்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

வெள்ளி 27 மே 2022