மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 மே 2022

ஜம்மு காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில்  4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களில் நடந்த இரண்டு வெவ்வேறு என்கவுன்டர்களில் காஷ்மீர் தொலைக்காட்சி நடிகையை கொன்ற இருவர் உட்பட 4 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இன்று காஷ்மீர் மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் உள்ள அகன்ஹன்சிபோரா பகுதியில் நேற்று இரவு ஒரு என்கவுண்டர் நடந்தது. இதற்கு ஒரு நாள் முன்னதாக புட்காம் மாவட்டத்தில் தொலைக்காட்சி பத்திரிகையாளர் அம்ரீன் பட் கொல்லப்பட்டதற்கு காரணமான இரண்டு பயங்கரவாதிகளை இந்திய வீரர்கள் சுற்றி வளைத்தார்கள் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து காஷ்மீர் மண்டல ஐஜிபி விஜயகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில், “பிடிபட்டவர்கள் புட்காம் மாவட்டத்தை சேர்ந்த ஷாஹித் முஷ்டாக் மற்றும் புல்வாமாவை சேர்ந்த ஃபர்ஹான் ஹபீப் என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் இருவரும் புதிதாக இணைந்த தீவிரவாதிகள். லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் லத்தீப் அறிவுறுத்தலின் பேரில் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட்டை கொன்றனர். அவர்களிடமிருந்து ஒரு ஏகே 56 ரக துப்பாக்கியும், ஒரு கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஸ்ரீநகர் நகரின் சௌரா பகுதியில் நடந்த மற்றொரு என்கவுன்டரில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காஷ்மீர் மண்டல ஐஜிபி விஜயகுமார் கூறுகையில், "காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 3 நாட்களில் ஜேஇஎம் அமைப்பை சேர்ந்த 3 பேர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 7 பேர் உட்பட 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மறைந்த ஆம்ப்ரீன் பாட்டின் கொடூரமான கொலை வழக்கு ஜம்மு காஷ்மீரின் அரசால் 24 மணி நேரத்தில் முடித்து வைக்கப்பட்டது. இது மிகவும் பாராட்டுக்குரியது” என்று கூறினார்

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

வெள்ளி 27 மே 2022