மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மே 2022

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி உண்ணாவிரதம் - வாக்குவாதம்!

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி  உண்ணாவிரதம் - வாக்குவாதம்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கூட்டு சாலையில் அதே கிராமத்தை சேர்ந்த சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலை ஓரத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்துக்கு பிரதான போக்குவரத்து சாலையாக உள்ள கூட்டு சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவு கூட்ட நெரிசல் ஏற்படுவதால் பள்ளி வாகனங்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இதனால் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி வருகின்றனர். ஆனால், இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தும்பேரி கூட்டு சாலையில் ஆக்கிரமிப்புக்குத் துணைபோகும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளைக் கண்டித்தும், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தாசில்தார் சம்பத் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் இன்று (மே 26) முதல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ராஜ்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 26 மே 2022