மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மே 2022

இந்தியாவில் ஊனமுற்றோருக்கான தொழில்நுட்ப மையம்!

இந்தியாவில் ஊனமுற்றோருக்கான தொழில்நுட்ப மையம்!

இந்தியாவின் முதல் முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான தொழில்நுட்ப மையம் (சிடிஐஇடி) ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்று திறக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநகர் என்ஐடி இயக்குநர் பேராசிரியர் ராகேஷ் சேகல், சிடிஐஇடி குழு உறுப்பினர்களுக்கு உன்னதமான யோசனைக்கு வாழ்த்து தெரிவித்தார், மேலும், “மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர், புதுமைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அவர்களுக்கு உதவ வேண்டும். இந்த மையம் சமூகத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

இதுகுறித்து என்ஐடி ஸ்ரீநகரின் பதிவாளர் கைசர் புகாரி கூறுகையில், “எங்கள் நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்கனவே பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. தார்மீக ரீதியாகவும் நிதி ரீதியாகவும் உன்னதமான காரணத்திற்காக இந்த திட்டங்களை மேம்படுத்தவும் ஆதரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு சமூகத்தின் அனுதாபம் மட்டும் தேவையில்லை, ஆனால் நாம் அவர்களை புதுமை மற்றும் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த வேண்டும்," என்று கூறினார்.

என்ஐடி இயக்குநர், பொறியியல் துறையின் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பல்துறை திட்டங்களுக்கான வழிமுறைகளை நிறுவனத்தில் உருவாக்க பரிந்துரைத்தார். சிடிஐஇடி உறுப்பினர்கள் பல்வேறு கிளைகளில் உள்ள மாணவர்களை இந்த தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்காக செயல்பட ஊக்குவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிடிஐஇடி தலைவர் டாக்டர் எம் ஏ பசாஸ், நாட்டில் உள்ள முதியோர் மற்றும் ஊனமுற்றோரின் குறைபாடுகளைச் சமாளிப்பதற்கான பல்வேறு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உறுப்பினர்களுக்கு விளக்கினார். மேலும், "இந்த மையம், கலாச்சாரம், பாலினம் மற்றும் வயதானவர்களின் வயது அடிப்படையில் மலிவு மற்றும் பொருத்தமான புதுமையான, உதவிகரமான தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும்," என்று அவர் உறுதியளித்தார்.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 26 மே 2022