மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மே 2022

கேதார்நாத்தில் மேலும் 4 யாத்திரிகர்கள் இறப்பு!

கேதார்நாத்தில் மேலும் 4 யாத்திரிகர்கள் இறப்பு!

கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் இல்லாத நிலையில், இதுவரை இல்லாத எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் இந்த ஆண்டு இமயமலைக் கோயில்களுக்கு வருகை தருகின்றனர். கடந்த மே 3ஆம் தேதி யாத்திரை தொடங்கியதிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் உள்ள இமயமலைக் கோயில்களில் 9 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

நேற்று முன்தினம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்வால் இமயமலையில் உள்ள கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில்களுக்கு செல்லும் வழியில் சார் தாம் யாத்திரையை ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள், பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் நேற்று மாலையிலிருந்து பக்தர்கள் யாத்திரையை தொடர அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் மேலும் நான்கு யாத்ரீகர்கள் நேற்று இறந்துள்ளனர் என்றும் மூன்று பேர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸில் எய்ம்ஸ் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி பி கே சுக்லா கூறுகையில், “மே 6ஆம் தேதி கேதார்நாத் திறக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 38 யாத்ரீகர்கள் இதயம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளால் இறந்துள்ளனர். நேற்று இறந்த கேதார்நாத் யாத்ரீகர்கள் குவாலியரைச் சேர்ந்த ரிஷி பதவுரியா, மத்தியப் பிரதேசத்தின் குணாவைச் சேர்ந்த ஷம்பு தயாள் யாதவ், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கமல்நாத் பட், மற்றும் மகாராஷ்டிராவின் கோலாப்பூரைச் சேர்ந்த சங்தேவ் ஜனார்தன் ஷிண்டே என்று அடையாளம் காணப்பட்டனர்.” என்று தெரிவித்தார்.

மேலும், “மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, இரண்டு பெண்கள் உட்பட மூன்று யாத்ரீகர்கள் விமானம் மூலம் எய்ம்ஸ் - ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் மத்தியப் பிரதேசத்தின் பிந்தைச் சேர்ந்த முன்னி தேவி, குணாவைச் சேர்ந்த சாவித்ரி தேவி மற்றும் மஹாராஷ்டிரத்தின் நாக்பூரைச் சேர்ந்த தாரா சந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்தார்.

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

வியாழன் 26 மே 2022