மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மே 2022

பிச்சை எடுத்த பணத்தில் மனைவிக்கு மோட்டார் வாகனம்!

பிச்சை எடுத்த பணத்தில் மனைவிக்கு மோட்டார் வாகனம்!

தன் மனைவி படும் கஷ்டத்தைக் காணப்பொறுக்காமல், பிச்சையெடுத்து சேர்த்து வைத்த பணத்தில் மோட்டார் வாகனம் வாங்கிக்கொடுத்திருக்கிறார் கணவர்.

மத்தியப்பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் சாஹு. இவரும் இவர் மனைவி முன்னியும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையம், கோயில், மசூதி எனப் பல இடங்களில் பிச்சை எடுத்து தினசரி 300 முதல் 400 ரூபாய் வரை சம்பாதித்து வாழ்க்கை நடத்துகின்றனர்.

சாஹுவுக்கு இரு கால்களும் செயலிழந்ததால், மூன்று சக்கர சைக்கிளில் சாஹு அமர்ந்துகொள்ள, முன்னி அவரை நாள் முழுவதும் தள்ளிக்கொண்டு செல்வார். பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நாள் முழுவதும் மழையிலும், கடுமையான வெயிலிலும் மூன்று சக்கர வண்டியைத் தள்ளிவந்ததால், உடல்நலக் குறைவு ஏற்பட்டதோடு, முதுகுவலியாலும் முன்னி அவதிப்பட்டு வந்துள்ளார்.

மனைவியின் இந்த வலியைப் போக்க நினைத்த சாஹு, பிச்சையெடுத்துச் சேர்த்து வைத்திருந்த 90,000 ரூபாய் பணத்தில் மோட்டார் வாகனத்தை வாங்கி மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த நிலையில் சாஹும் அவருடைய மனைவியும் வாகனத்தில் அமர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

தன் மனைவியின் வலியறிந்து சாஹு செயல்பட்டதற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள சாஹு, "முன்பு எங்களிடம் மூன்று சக்கர சைக்கிள் இருந்தது, என் மனைவி முதுகுவலி எனச் சொன்னதால், 90,000 ரூபாயில் இந்த வண்டியை வாங்கினேன். இப்போது நாங்கள் போபால், இந்தூர் வரைகூட செல்லலாம்'' என்று கூறியுள்ளார்.

ராஜ்

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

புதன் 25 மே 2022