மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மே 2022

விலை வீழ்ச்சி: குவிந்துகிடக்கும் அன்னாசிப்பழங்கள்!

விலை வீழ்ச்சி: குவிந்துகிடக்கும் அன்னாசிப்பழங்கள்!

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அன்னாசிப்பழங்களின் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் சிறு விவசாயிகள் அதிக இழப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

தமிழகத்தில் அன்னாசிப்பழம் விவசாயத்தில் குமரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாவட்டத்தில் தற்போது ஏறக்குறைய 5,000 ஹெக்டேரில் அன்னாசி பயிரிடப்படுகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அன்னாசிப்பழங்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. குறிப்பாக ஏற்றுமதிக்கு எடுத்துக் கொள்ளப்படும் காய்கள் கிலோ ரூ.52-க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அன்னாசி பழங்களின் விலை குறைந்து வருகிறது.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பழங்கள் தற்போது கிலோ ரூ.22-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஏற்றுமதிக்குப் பயன்படுத்த முடியாத நன்கு பழுத்த பழங்கள் கிலோ ரூ.30 வரை விற்பனையான நிலையில் தற்போது கிலோ ரூ.15-க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள அன்னாசி விவசாயி, "அன்னாசிப்பழங்கள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடைக்காலங்களில் அதிகமாக விற்பனையாகும். இந்த நேரத்தில் பழங்களை அறுவடை செய்யும் வகையில் விவசாயிகள் நடவு செய்வது வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கோடைக்காலத்தில் தொடர் மழை பெய்து வருவதால் அன்னாசிப்பழங்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. நன்றாக பழுத்த பழங்களை இருப்புவைத்து விற்பனை செய்யும் வகையிலான தொழில்நுட்பங்கள் இல்லாததால் சிறு விவசாயிகள் அதிக இழப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

புதன் 25 மே 2022