மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மே 2022

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

மதுரை மாவட்டம், திருமங்கலம், கள்ளிக்குடி வட்டத்தில் 100 நாள் வேலை அட்டையைப் புதுப்பிக்க லஞ்சம் கேட்பதாக யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளிக்குடி வட்டம் வெள்ளாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரகுண்டு கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் கண்மாய் பகுதியைச் சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பழைய அட்டைக்கு பதிலாக புதிய அட்டை வழங்க ரூ.200 வழங்க வேண்டும். புதிதாக பணியில் சேருபவர்கள் அட்டைக்கு ரூ.500 வழங்க வேண்டும் என ஊராட்சி செயலாளர் உத்தரவின் பேரில் பணித்தளப் பொறுப்பாளர்களுக்கு நிர்பந்தம் செய்வதாகவும், மேலும் பணி நடைபெறும் நாட்களில் பணிக்கு வரும் ஒவ்வொருவரும் ரூ.5 கொடுத்து விட்டுத்தான் வேலையைப் பார்க்க வேண்டும் என கூறி ஒவ்வொருவரிடமும் 5 ரூபாய் பெற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் 100 நாள் பணிகள் நடைபெறும்போது அங்கு வந்து ஆய்வு செய்யும் ஊராட்சி செயலாளர் பெண்களைக் குறை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஊராட்சி மன்றத் தலைவரிடம் சென்று கிராம மக்கள் புகார் அளித்தனர். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள், 300-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்க லஞ்சம் கேட்பதாக கள்ளிக்குடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

ராஜ்

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

புதன் 25 மே 2022