மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 மே 2022

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி இந்திரா நகரில் உள்ள டீக்கடையில் மொய் விருந்து நடத்தியது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் வாழும் அங்குள்ள மக்களுக்கு இந்திய அரசு, தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் பொதுமக்களும், தன்னார்வலர்களும் நிதி, நிவாரண உதவி வழங்க தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி இந்திரா நகரில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தனது கடையில், தேநீர் மொய் விருந்து நடத்தியுள்ளார்.

இதில் வாடிக்கையாளர்கள் டீ அருந்தி விட்டு அந்த டீக்குரிய பணம் அல்லது தங்களால் முடிந்த நிதியை அங்கு வைத்திருந்த அண்டா வடிவிலான உண்டியலில் செலுத்தினர்.

இதுகுறித்து பேசியுள்ள டீக்கடை உரிமையாளர் சிவக்குமார், "இந்த மொய் விருந்தில் மொத்தம் ரூ.16,000 நிதியுதவி அளித்துள்ளனர். இந்த நிதியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து தமிழக அரசு மூலம் இலங்கைக்கு அனுப்பப்படும்" என்றார்.

மொய் விருந்து நடத்திய அன்று வாடிக்கையாளர்களிடம் டீக்கான தொகையை டீக்கடை உரிமையாளர் நேரடியாகப் பெறவில்லை. அனைவருக்கும் டீயை இலவசமாக விற்பனை செய்தார். இந்தச் செயல் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது

ராஜ்

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

செவ்வாய் 24 மே 2022