மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 மே 2022

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் 8 நான்கு சக்கர வாகனம் மற்றும் 51 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 59 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கான பொது ஏலம் ஆனைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 28ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த வாகனங்களை வருகிற 27ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், இருசக்கர வாகனத்துக்கு 2,000 ரூபாயும், 4 சக்கர வாகனத்துக்கு 5,000 ரூபாயும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் பொது ஏலம் நடத்தும் இடத்தில் முன்பணம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் ஏலம் விடும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தைப் அணுகலாம் என்று ஈரோடு மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராஜ்

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

செவ்வாய் 24 மே 2022