மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 மே 2022

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

பொறியியல் மற்றும் டிப்ளோமா படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதங்களை வரும் கல்வி ஆண்டு முதல் தொழிற்கல்வி நிலையங்கள் அமல்படுத்த வேண்டும் என்றும் ஏஐசிடிஇ பரிந்துரைத்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) நாடு முழுவதும் உள்ள தொழிற்கல்வி படிப்புகளுக்கான கட்டணங்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே போல ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியர்களின் சம்பள விகிதங்களும் மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய விகிதங்களை நாடு முழுவதும் உள்ள தொழிற்கல்வி நிலையங்கள் வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என ஏஐசிடிஇ பரிந்துரைத்துள்ளது.

இதன்படி பிஇ, பிடெக், பிஆர்க் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தக் கட்டணம் ரூ.55,000இல் இருந்து 1,15,000 வரை இருந்தது வந்தது.

இதே போல், டிப்ளோமா படிப்புகளுக்கான கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சம் ரூ.67,900 முதல் அதிகபட்சம் ரூ.1,40,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே போல் எம்இ, எம்டெக், எம்ஆர்க் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதில் குறைந்தபட்சமாக ரூ.1,40,000 முதல் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்கிட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் ஏஐசிடிஇ பரிந்துரை செய்துள்ளது. அதன்படி உதவிப் பேராசிரியர்களுக்கான சம்பளம் ரூ.1,37,000 என்றும், பேராசிரியர்களுக்கான சம்பளம் ரூ.2,60,000 என்றும் மாற்றி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகளை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.

அத்துடன் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி கட்டணத்தைக் குறைக்கக் கூடாது எனவும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.

-ராஜ்-

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

திங்கள் 23 மே 2022