மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 மே 2022

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

பிக்பாஸ் ஆறாவது சீசன் எப்போது தொடங்கும், போட்டியாளர்கள் யார் என்பது குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஐந்து சீசன்களை முடித்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஓடிடி பார்வையாளர்களுக்கு என பிரத்தியேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. தமிழில் ஐந்து சீசன்கள் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் படப்பிடிப்பு பணிகள் காரணமாக மற்றவர்களுடைய பணிகள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பாலா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூலை இறுதி வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும்.

அந்த வகையில் இந்த வருடமும் ஆறாவது சீசன் ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் நிகழ்ச்சியை சொன்னபடி கமல்ஹாசனே தொகுத்து வழங்குவாரா அல்லது பிக்பாஸ் அல்டிமேட் போன்று ஆறாவது சீசனையும் நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்குவாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பட்டியலும் தற்போது வெளியாகியிருக்கிறது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தேர்வு அந்த தொலைக்காட்சியின் சின்னத்திரை பிரபலங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சியை சேர்ந்தவர்கள், தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கக் கூடிய நடிகர்கள், தொகுப்பாளர்கள் வெளி நாட்டில் இருக்கக்கூடிய மாடல்கள், நாட்டுப்புற கலைஞர்கள் பின்னணி பாடகர்கள் என கலவையாக இருக்கும். அந்த வகையில் இந்த வருடமும் விஜய் டிவியிலிருந்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஸ்ருதிகா, 'சார்பட்டா' பட புகழ் சந்தோஷ், 'மௌனராகம்' சீரியல் கதாநாயகி பிரவீனா, நடிகை சரண்யா, கடந்த சில பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகை பூனம் பஜ்வா, விஜய் டிவி சீரியலில் முன்பு நடித்த நடிகையும் நடன இயக்குநருமான ஜெனிஃபர், நடிகர் சுப்பு பஞ்சு, நகைச்சுவை நடிகர் ரெடிங் கிங்ஸ்லே ஆகியோரது பெயர்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

இதில் யார் இறுதி செய்யப்படுவார்கள் இவர்கள் தவிர வேறு யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

ஆதிரா

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

திங்கள் 23 மே 2022