மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 மே 2022

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த 6 வயது சிறுவன் !

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த 6 வயது சிறுவன் !

பஞ்சாப் மாநிலம் பைரம்பூர் அருகே உள்ள கியாலா புலந்தா கிராமத்தில் நேற்று 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆறு வயது சிறுவன், ஏழு மணி நேர மீட்புப் பணிக்கு பின் அதிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட போது உயிரிழந்தான். இறந்த சிறுவனின் பெயர் ரித்திக் ரோஷன். இந்த சிறுவனின் மரணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சங்கரூர் மாவட்டத்தில் இதேபோன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை நினைவூட்டுகிறது, அங்கு இரண்டு வயது குழந்தை ஃபதேவிர் சிங் 150 அடி ஆழம் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தார்.

இதுகுறித்து ஹோஷியார்பூர் துணை கமிஷனர் சந்தீப் ஹன்ஸ் கூறுகையில், "சங்ரூர் சம்பவத்திற்குப் பிறகு எதிர்காலத்தில் போர்வெல்லை திறக்க மாட்டோம் என்று முடிவு செய்யப்பட்டதால், இந்த சம்பவம் குறித்து கடுமையான விசாரணை நடத்தப்படும்." என்று தெரிவித்தார்

ரித்திக் ஒரு வயலில் விளையாடிக் கொண்டிருந்தார், சில தெரு நாய்கள் அவரைத் துரத்தத் தொடங்கியபோது அவர் போர்வெல் தண்டில் ஏறினார். ஒன்பது அங்குல அகலம் கொண்ட போர்வெல் தண்டு சணல் பையால் மூடப்பட்டு இருந்ததால், சிறுவனின் எடை தாங்க முடியாமல் நேற்று காலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ரித்திக் ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த சிறுவனை மீட்ட பிறகு உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இறந்த சிறுவன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த போது சிறுவனின் உடல்நிலையை கண்காணிக்க ஆழ்துளை கிணற்றுக்குள் கேமரா வைக்கப்பட்டு, குழாய்கள் மூலம் அதிக ஆக்ஸிஜனும் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சிறுவனின் மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சிறுவனின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அவர் அறிவித்தார்.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

திங்கள் 23 மே 2022