மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 மே 2022

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, அனைத்து உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். நேற்று மேகாலயாவிலுள்ள நார்த் ஈஸ்ட் ஹில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பட்டம் பெற்ற மாணவர்களை வேலைவாய்ப்பை உருவாக்கி சமுதாயத்துக்கு நேர்மறையாகப் பங்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர், “அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் புதிய கொள்கையின்படி, அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்" என்று அவர் கூறினார்.

மேலும், “மேகாலயாவில் 15 லட்சம் இளைஞர்கள் உள்ளனர், அங்குள்ள 3.5 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள். இது மாணவர்களுக்கான நேரம். நார்த் ஈஸ்ட் ஹில் பல்கலைக்கழகம் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆராய்ச்சிகள் என்பது சமூகத்துக்கும் மனித குலத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்ற முக்கியமான ஒன்று. ஆராய்ச்சிகள் எளிதாக வாழ்வதற்கும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உறுதுணையாக இருக்கும்” என்று கூறினார்.

நார்த் ஈஸ்ட் ஹில் பல்கலைக்கழகம் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி கல்வி தரத்தை உயர்த்தும் ஒரு பல்கலைக்கழகமாகச் செயல்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக்கொண்டார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் 16,000க்கும் மேலான மாணவர்கள் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

ஞாயிறு 22 மே 2022