மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 மே 2022

166 பதிவு செய்யப்படாத மருத்துவர்கள்!

166 பதிவு செய்யப்படாத மருத்துவர்கள்!

மகாராஷ்டிரத்தில் ஜல்னா மாவட்டத்தில் குறைந்தது 103 போலி மருத்துவர்கள், 166 பதிவு செய்யப்படாத மருத்துவப் பயிற்சியாளர்கள் சட்டவிரோதமாகப் பயிற்சி செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து சுகாதாரத் துறையின் அறிக்கையின்படி, மாவட்டத்தில் 433 மருத்துவர்கள் உள்ளனர், அவர்களில் 267 பேர் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர், 166 பேர் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்படவில்லை, 103 பேர் மருத்துவ பட்டங்கள் இல்லாதவர்கள் மற்றும் போலியானவை என்று அறிவிக்கப்பட்டனர்.

இந்த போலி டாக்டர்கள் கிராமப்புறங்களிலும் குடிசைப் பகுதிகளிலும் அறுவை சிகிச்சை செய்து உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக மகாராஷ்டிர மருத்துவத்துறை அறிக்கை கூறுகிறது.

மகாராஷ்டிரத்தில் அம்பாட்டில் 65 பதிவு செய்யப்படாத மருத்துவர்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து மந்தாவில் 46, பர்தூரில் 30, போகர்டனில் 13, ஜல்னாவில் 7 மற்றும் கன்சாவாங்கி தாலுகாவில் நான்கு பேர் உள்ளனர் என்று மருத்துவத்துறை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இதுகுறித்து மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் விவேக் கட்கோன்கர் கூறுகையில், "போலி மருத்துவர்கள் மற்றும் பதிவு செய்யப்படாத மருத்துவப் பயிற்சியாளர்கள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது." என்று கூறினார்.

மேலும் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் மற்றும் சட்டவிரோத கருக்கலைப்பு மையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறைக்கு டோபே முன்னதாக உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில், தாலுகா சுகாதார அலுவலர் டாக்டர் ஷீத்தல் சோனி, ஜல்னா தாலுகாவில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் ஜல்னாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் மாவட்டத்தின் பாதுகாவலர் அமைச்சராகவும் உள்ளார்.

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

ஞாயிறு 22 மே 2022