மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 மே 2022

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஹைதராபாத்தில் 7,000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்து தப்பி ஓடியவர் நகரத்தில் உள்ள சைபர் செல் மூலம் கைது செய்யப்பட்டதாக சைபர் செல் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். மேலும் பிடிபட்டவர் ஹைதராபாத் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது கூட்டாளிகள் 8 பேரை ஹைதராபாத் போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இதுகுறித்து சைபர் செல் எஸ்பி ஜிதேந்திர சிங் கூறுகையில், “நகரின் சுக்லியா பகுதியைச் சேர்ந்த பவன் கோட்டியா என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் அவருக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பாக தப்பி ஓடிவிட்டார். பவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த எட்டு குற்றவாளிகளை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர். ஒரு ரகசிய தகவலின் பேரில், சைபர் செல் குழு பவனை கைது செய்தது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், சில ஆண்டுகளாக நகரத்தில் தங்கியிருப்பதாகவும் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஆதார் அட்டை தயாரிக்கும் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.” என்று தெரிவித்தார்.

பவன் தனது நண்பர் ரோஹித்துடன் இணைந்து 2016ஆம் ஆண்டு முதல் எம்பி மற்றும் அஸ்ஸாமில் ஆதார் அட்டைகளைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்கத் தொடங்கினார். பின்னர் ஹைதராபாத்தைச் சேர்ந்த அவரது நண்பர்களோடு போலி ஆதார் தயாரிக்கத் தொடங்கினார். இதுவரை 7000 போலி ஆதார் கார்டுகளை தயாரித்துள்ளதாக ஐதராபாத் காவல்துறையிடம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஹைதராபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பிறகு, பவன் மற்றும் அவரது நண்பர் அசாமில் இருந்து இந்தூருக்கு வந்து, காவல்துறையினரை திசை திருப்புவதற்காக தொடர்ந்து இடங்களை மாற்றிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

சனி 21 மே 2022