மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 மே 2022

ஜார்க்கண்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பச்சை, வெள்ளை பெயிண்ட்

ஜார்க்கண்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பச்சை, வெள்ளை பெயிண்ட்

ஜார்க்கண்டில் உள்ள 35,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளின் சுவர்களில், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் கொடியுடன் தொடர்புடைய பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்ய படவுள்ளது. பச்சை நிறம் கண்களுக்கு இதமாகவும், வெள்ளை தூய்மையின் அடையாளமாகவும் இருப்பதால் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் வண்ணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆளும் கட்சி கூறினாலும், எதிர்க்கட்சியான பிஜேபி இது அரசியல் நோக்கில் செய்யப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.

ஜார்க்கண்ட் கல்வித் திட்ட கவுன்சில், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவின் படி, பள்ளி கட்டிடங்களின் சுவர்கள் அன்னம், அங்கோரா அல்லது தேங்காய் வெள்ளை நிறத்திலும், உறைபனி பச்சை அல்லது மெஹந்தி பச்சை நிறத்திலும் பயன்படுத்தப்படும். சுவர்களின் எல்லைகள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கழிப்பறைகள் அடர் பச்சை நிறத்தில் வர்ணம் பூசலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வியமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ, "கட்டிடங்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறங்கள் வர்ணம் பூசி, பள்ளிகள் புதிய தோற்றம் பெறும். நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாங்கள் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்தோம். பச்சை என்பது கண்களுக்கு இனிமையானது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வெள்ளை தூய்மை மற்றும் புத்துணர்ச்சியைக் குறிக்கிறது." என்று தெரிவித்தார்.

இருப்பினும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கட்சிக் கொடியுடன் - பச்சை பின்னணியில் வெள்ளை நிற வில் மற்றும் அம்புகளுடன் வண்ண கலவை தொடர்புடையதாக இருப்பதால், இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2002-03ஆம் ஆண்டில் பாஜக ஆட்சியில் பள்ளி கட்டடங்களின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு நிறமாக மாற்றப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், ஜேஎம்எம் ஆட்சியில் இருந்தபோது, கட்டிடங்களின் நிறம் பிரகாசமான இளஞ்சிவப்பு நிறமாக மாற்றப்பட்டது, கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தங்க பழுப்பு நிறத்தில் இருந்தன.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 21 மே 2022