மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 மே 2022

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சென்னையில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று 2018ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த நடைமுறையை யாரும் பெரும்பாலும் பின்பற்றவில்லை.

இந்நிலையில், பின் சீட்டில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “சென்னை பெருநகரில் பகுப்பாய்வு செய்ததில் 2022 ஜனவரி 1 முதல் மே 5 வரையிலான காலப்பகுதியில் இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்தனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 80 பேர் பின் இருக்கையில் அமர்ந்தவர்கள் 18 பேர். அதுபோன்று 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 714 பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் இயக்கியவர்கள் மற்றும் 127 பேர் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர்கள்.

எனவே விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளைக் குறைக்கவும் நாளை மறுநாள் (மே 23) முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் விதிகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

சனி 21 மே 2022