மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 மே 2022

கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலை குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலை குழம்பு!

சுவையைக் கூட்ட சமையலில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையில் வைட்டமின்கள், கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம். உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரிக்கும் கறிவேப்பிலையை உணவில் சேர்த்தால் பலர் தனியே எடுத்து வைத்துவிடுவார்கள். அவர்களுக்கு இந்த சுவையான கறிவேப்பிலை குழம்பு பெஸ்ட் சாய்ஸாக அமையும்.

என்ன தேவை?

கறிவேப்பிலை – 2 கப்

சின்ன வெங்காயம் – கால் கப்

பூண்டு - 10 பல்

சீரகம் – அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 10

மிளகு – அரை டீஸ்பூன்

தேங்காய்ப்பல் – 2 டேபிள்ஸ்பூன்

புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க...

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்

பெருங்காயம் – கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சீரகம், காய்ந்த மிளகாய், மிளகை வறுத்து எடுத்துக்கொள்ளவும். இவற்றுடன் புளி, கழுவிய கறிவேப்பிலை, தேங்காய்ப்பல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பூண்டு, வெங்காயம் தோல் நீக்கி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு தாளிப்புப் பொருள்களைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்துவரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

நேற்றைய ரெசிபி : வெங்காயம் பூண்டு குழம்பு!

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

சனி 21 மே 2022