மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 மே 2022

அசாமில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள்

அசாமில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள்

அசாமில் இதுவரை கண்டிராத அளவுக்கு வெள்ளம் வந்து அந்த மாநிலத்தை கடுமையான சூழ்நிலையில் தள்ளியுள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உணவு இல்லாமல், தங்க இடம் இல்லாமல் தண்ணீரில் சிக்கித் தவிக்கின்றன. ராணுவம், மாநில படைகள் மற்றும் மீட்பு படைகள், இடைவெளி இல்லாமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அந்த மாநிலம் அடைந்த பாதிப்பிற்கு போதுமானதாக இல்லை, பல பகுதிகளில் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் 2 நாட்கள் வரை உணவில்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

அஸ்ஸாமில் வெள்ளம் பெருகி வரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக கண்காணிப்பதே அரசாங்கத்தின் சவாலாக உள்ளது, ஆனால் இந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு உயிர் வாழவே சவாலாக உள்ளது. இந்த நேரத்தில், பலர் விளைநிலங்கள் இல்லாமல், தானியங்கள், பணம் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஒரு நாட்டுப் படகு கூட இல்லாமல், அரசாங்க உதவிக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

பல கிராமங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து அனைத்து பக்கங்களிலும் இருந்து வழிகள் துண்டிக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அரசாங்கம் முடிந்த அளவுக்கு உதவுகிறது ஆனாலும் இன்னும் சில பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்கவும், மீட்பு படைகளை அனுப்பவும் சிரமமாக உள்ளது. பல கிராமங்களில் மக்கள் முழுவதுமாக வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களிடம் வளங்கள் எதுவும் இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் வெள்ளம் வருவது இதுவே முதல் முறை என்பதால் பலரிடம் படகுகள் இல்லை. இதனால் உள்ளூர் மக்களே இதுபோன்று சிக்கியவர்களை மீட்கும் பணியில் இரவும் பகலுமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பெரும் வெள்ளத்தில் சிக்கி பல விளைந்த பயிர்கள் நாசமானதால், நல்ல வருமானத்தை எதிர் நோக்கி காத்திருந்த விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சில இடங்களில் விமானப்படை மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா முடிந்து ஒரு இயல்பு வாழ்க்கையை எதிர்நோக்கியிருந்த மாநில அரசுக்கும், மக்களுக்கும் இது பெரும் பின்னடைவே!

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 20 மே 2022